ADDED : நவ 11, 2024 05:27 AM

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
திருப்பூர் சுற்றுப்பகுதி, உடுமலை மற்றும் தாராபுரம் சுற்றுப்பகுதி என, மாவட்ட எல்லையில், மூன்று குழுக்கள் சுழன்று பணியாற்றி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 20 ஆயிரத்து, 492 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் இதுவரை, இரண்டு லட்சத்து, 35 ஆயிரத்து, 813 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நட்டு வைத்த உரிமையாளர் பெயர், தொலைபேசி எண், தொகுதி, மரக்கன்று நட்டு வைக்கப்பட்ட கிராமம், புவி இருப்பு அடையாளம் காணல், எடுக்கப்பட்ட குழிகள் எண்ணிக்கை, பொறுப்பாளர் பெயர் ஆகிய விவரங்கள், 'டிஜிட்டல்' முறையில் பராமரிக்கப்படுகின்றன.
தாராபுரம் தாலுகா, சாலக்கடை கிராமம் மேட்டுக்காட்டு தோட்டத்தில், நேற்று, 1050 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
உரிமையாளர்கள் சக்திவேல் - தனலட்சுமி ஆகியோர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.
செம்மரம் -300, சந்தனம் -300, நாவல் -200, தேக்கு -100, கொய்யா -100, மாதுளை -50 என, 1,050 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, பசுமை களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.