ADDED : பிப் 09, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் அவிநாசியில் நடைபெற்று வரும் அரசுப்பணிகளை பார்வையிட்டனர்.
குழு தலைவர் அன்பழகன் கூறுகையில், ''1.38 கோடியில் சங்கமாங்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை பயன்பாட்டுக்கு உபயோகமாக இருக்கும். நீராதாரம் பெருகும். அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் தண்ணீர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். விரைவில் இந்த குறை நிவர்த்தியாகும். ஏழு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது'' என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், அவிநாசி தாசில்தார் மோகனன், அரசு மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

