/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சங்கிலிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி தீவிரம்
/
சங்கிலிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 17, 2025 10:52 PM

திருப்பூர்; திருப்பூர் நகரின் தென்பகுதியிலிருந்து உருவாகி வருகிறது சங்கிலிப் பள்ளம் ஓடை. பல்லடத்தின் வடக்கு பகுதியில் சேகரமாகும் மழை நீர் ஓடையாக உருவெடுத்து சின்னக்கரை வழியாக திருப்பூர் நோக்கி வருகிறது. வீரபாண்டி பகுதியில் திருப்பூரில் நுழையும் இந்த ஓடை, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளைக் கடந்து நொய்யலில் சென்று கலக்கிறது.
இதில், அதிக மண் மேடு சேர்ந்தும், செடி கொடிகள் சூழ்ந்தும் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுவதும் மழைக்காலங்களில் வழக்கமான ஒன்றாg உள்ளது. இதனால், பருவ மழை துவங்கும் போது இந்த ஓடைப்பகுதி துார் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அவ்வகையில், கடந்த தென்மேற்கு பருவ மழை துவக்கத்தின் போது இந்த ஓடையை மாநகராட்சி நிர்வாகம் துார் வாரியது. இருப்பினும் சில இடங்களில் முழுமையாக துார் வாராமலும் சில பகுதிகளில் மீண்டும் செடிகள் முளைத்தும் ஓடையில் நீர் செல்வதில் தடை ஏற்படும் நிலை காணப்பட்டது. இதனால், தற்போது மீண்டும் இரண்டாம் கட்டமாக ஓடை துார் வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது.

