/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனப்பகுதியில் துாய்மைப்பணி; தன்னார்வலர்களுக்கு அழைப்பு
/
வனப்பகுதியில் துாய்மைப்பணி; தன்னார்வலர்களுக்கு அழைப்பு
வனப்பகுதியில் துாய்மைப்பணி; தன்னார்வலர்களுக்கு அழைப்பு
வனப்பகுதியில் துாய்மைப்பணி; தன்னார்வலர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 20, 2024 10:12 PM
உடுமலை : உடுமலை அருகே, ஏழுமலையான் கோவில் வனப்பகுதியில், துாய்மைப்பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதையொட்டி, சனிக்கிழமை தோறும், உடுமலை சின்னாறு வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை இருப்பினும், பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள், பிரசாத பொருட்களை பயன்படுத்தி விட்டு, அதன் கழிவுகளை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.
வனப்பகுதியில் இவ்வாறு கழிவுகள் வீசப்படுவதை தவிர்க்க, தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், வழிபாடு முடிந்த பின் உடுமலையிலுள்ள தன்னார்வல அமைப்புகள், சங்கங்களின் சார்பில் துாய்மைப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாளை (22ம்தேதி) உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் சில தன்னார்வல அமைப்புகளின் சார்பில் கோவில் சுற்றுப்பகுதிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த துாய்மைப்பணியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், 99651 42973, 88835 35380, 99656 44666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், துாய்மைப்பணி செய்ய விரும்பும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நாளை (22ம்தேதி) அதிகாலை, 5:30 மணிக்கு ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதிக்கு வருவதற்கும் சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.