ADDED : நவ 04, 2026 07:47 AM
திருப்பூர்,:மாநகராட்சி,
நகராட்சிகளில் தனியார் மயமாக்கப்பட்ட துாய்மைப்பணி ஒப்பந்த காலம்
முடிந்த நிலையில், தனியார் மயத்தை கைவிட்டு, அந்தந்த உள்ளாட்சி
நிர்வாகங்கள் சார்பில், மகளிர் குழுக்கள் வாயிலாக துாய்மைப் பணி
மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த,
2022ல், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் துாய்மைப் பணி தனியார்
மயமாக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களின், 3 ஆண்டு
ஒப்பந்த காலம், கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கடந்த
மாதம், 31ம் தேதி வரை, 3 மாத காலம் நீட்டிப்பு செய்து கொடுக்கப்பட்டது.
துாய்மைப்
பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்க அரசு
முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஒப்பந்தம் எடுத்த தனியார்
நிறுவனங்கள், 'தங்களுக்கே இப்பணியை மீண்டும் கான்ட்ராக்ட்
அடிப்படையில் வழங்க வேண்டும்' என மனு செய்து, ஐகோர்ட்டில் இடைக்காலத்
தடை உத்தரவு பெற்றுள்ளன.
'வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்து,
அவற்றை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து அப்புறப்படுத்த
வேண்டும். ஆனால், தரம் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல்
வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை பாறைக்குழி அல்லது வேறு இடங்களில்
மொத்தமாக கொட்டிவிட்டுச் செல்லும் பணியை மட்டுமே ஒப்பந்த
நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அத்துடன், தினசரி, இவ்வளவு டன்
குப்பை என இலக்கு நிர்ணயித்து, கணக்கு காண்பித்து அதற்கான
கட்டணத்தையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களிடம்
இருந்து வசூலித்துக் கொள்கின்றன. இதனால், துாய்மைப் பணி முழுமை
பெறவில்லை,' என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
நாங்களும் இணைகிறோம்...
இதுகுறித்து
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் கூறியதாவது: துாய்மை
பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் தொடர்
கோரிக்கை. தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாகக் குறைந்தபட்ச கூலி கூட
பணியாளர்களுக்கு முறையாக வழங்கவில்லை. அரசு ஆணைப்படி துாய்மைப்
பணியாளர்கள், ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள்
(சூப்பர்வைசர்கள்), குடிநீர் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு
பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.
இதற்கு
நேர்மாறாக, 'அவுட்சோர்சிங்' முறையால், தினசரி குறைந்தபட்சம், 150
ரூபாயை ஒரு ஊழியர் இழக்க நேரிட்டது. மாதத்துக்கு, 3 ஆயிரம் ரூபாய் வீதம்,
கடந்த, 3 ஆண்டுகளில் பல லட்ச ரூபாயை ஒவ்வொரு தொழிலாளியும்
இழந்துள்ளனர். துாய்மைப் பணியை நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச சம்பளம், பி.எப்., உறுதி
செய்ய வேண்டும் என்பது சமீபத்திய அரசாணையில் தெளிவாகக்
கூறப்_பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை
பின்பற்ற வேண்டும். தனியார் துாய்மைப் பணி டெண்டர் காலம் முடிந்த
பின்னரும், தொடர்ந்து ஒப்பந்தத்தை பெற நிறுவனங்கள் வழக்கு
தொடுத்துள்ளன. தனியார் ஒப்பந்ததாரர்கள் தொடுத்த வழக்கு ஜெயிக்காது.
துாய்மைப்
பணியில் தனியார் மயம் கூடாது என்பதால், நாங்களும் தொழிலாளர்கள்
சார்பில் அந்த வழக்கில் இணைய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்
கூறினார்.
