/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர் மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர் மருத்துவ முகாம்
ADDED : டிச 08, 2024 02:52 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் - 3 மற்றும் 4 ஆகியவற்றில் துாய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இம்முகாமை, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தனர். மாநகர நல அலுவலர் முருகானந்த், உதவி கமிஷனர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர் குழுவினர், துாய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.