/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப்பணியாளர் காத்திருப்பு போராட்டம்
/
துாய்மைப்பணியாளர் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 18, 2025 10:33 PM

திருப்பூர்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துாய்மை பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும்; துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; சட்ட விதி களின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் காத்திருப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
திருப்பூர் மாவட்ட அளவிலான போராட்டம் நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரே துவங்கியது. மாநில செயலாளர் கோபகுமார் துவங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பழனி சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரங்கராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் சம்பத் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டத்தின் பல பகுதி களிலிருந்தும் நுாற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலக அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

