/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்கள் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்கள் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 11:17 PM

திருப்பூர்; துாய்மை பணியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன், மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமைவகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி, மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் மற்றும் துாய்மை பணியாளர் ஏராளமானோர் பங்கேற்று, கையில் மண் சட்டி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'குடிநீர் ஆபரேட்டர்கள், துாய்மை பணியாளர், துாய்மை பாரத இயக்க மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு, கடந்த ஜன., 6ம் தேதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும்,' என, கோஷங்கள் எழுப்பினர்.