/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தல்
/
கிராமங்களுக்கு கூடுதல் பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தல்
கிராமங்களுக்கு கூடுதல் பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தல்
கிராமங்களுக்கு கூடுதல் பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 23, 2025 12:37 AM
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், குப்பை கழிவுகளை சேகரித்து அகற்ற, கிராமங்களுக்கு கூடுதல் இ-கார்ட் பேட்டரி வாகனங்கள் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் துாய்மைபாரத திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும், துாய்மைப்பணியாளர்கள் குப்பைக்கழிவுகளை அகற்றி வருகின்றனர். இப்பணிகளை செய்வதற்கு, மாநில அரசின் சார்பில், பேட்டரி வாகனங்கள் அறிமுகபடுத்தப்பட்டது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், கடந்த 2021-22 நிதியாண்டில் மொடக்குபட்டி, குறிஞ்சேரி ஊராட்சிகளுக்கு மட்டுமே, இந்த வாகனங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 15வது மானியகுழு நிதி ஒதுக்கீட்டில், 2022-23ம் ஆண்டுக்கு ஆண்டியகவுண்டனுார், சின்னவீரம்பட்டி, ஜல்லிபட்டி, கல்லாபுரம், கண்ணம்மநாயக்கனுார், கொடிங்கியம், மானுபட்டி, பெரியபாப்பனுாத்து, பூலாங்கிணர் உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு, இந்த வாகனங்கள் துாய்மைப்பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தள்ளுவண்டிகளில் கழிவுகளை எடுத்து செல்வதற்கும், சேகரிப்பதற்கும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் தற்போது துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், குடியிருப்புகள் தோறும், இந்த வண்டிகளை தள்ளிக்கொண்டு செல்வதற்கு நீண்ட நேரமாகிறது.
இதனால் விடுபட்ட கிராமங்களுக்கும், இந்த பேட்டரி வாகனம் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.