/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் 'சானிடைசர்' பாட்டில்கள்
/
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் 'சானிடைசர்' பாட்டில்கள்
ADDED : செப் 30, 2025 01:10 AM

திருப்பூர்; துாய்மை இந்தியா மிஷன் திட்டத்தில், அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் துாய்மை பணிகள், மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் நடக்கிறது. அதில் ஒன்றாக, கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சானிடைசர் பாட்டில்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. ரசாயன கலவையான சானிடைசர் பாட்டில்களை, முறையாக அப்புறப்படுத்தாமல், பொறுப்பற்றவகையில், கலெக்டர் அலுவலக பின் மரத்தடியில் வீசியுள்ளனர்.
இவை அனைத்தும், கடந்த 2022 ம் ஆண்டிலேயே காலாவதியானவை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள், குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆபத்தை உணராமல் கொட்டி வைக்கப்பட்டுள் காலாவதி சானிடைசர்களை உரியமுறையில் அப்புறப்படத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.