ADDED : ஏப் 04, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று காலை, குளிர்ந்த காற்று வீசியது. ஆனாலும், மதியம் வரை வெயில் சுட்டெரிக்கவே செய்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கோடைக்கு இதம் சேர்க்கும்வகையில், ஆங்காங்கே லேசான துாறல் மழை விழுந்தது. இரவு நேரம் குளுமை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவிநாசி, ஆட்டையாம்பாளையம், சூளை, வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோடு பகுதி, பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளையில் குளுகுளு காற்று வீசியது. மாலையில், சாரல் மழை பெய்தது.

