ADDED : செப் 07, 2025 09:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; சாய்பாபா நுாறாவது பிறந்தநாளையொட்டி உடுமலை சத்யசாய் சேவா நிறுவனத்தின் சார்பில் 108 பஜன் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை சத்ய சாய் சேவா நிறுவனத்தின் சார்பில் சாய்பாபாவின் நுாறாவது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. உடுமலை அருகே டி.வி., பட்டினத்தில் உள்ள சத்யசாய் மந்திரில், 100 சாய் பஜனைகள் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பஜன் நிகழ்ச்சி காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை வரை நடந்தது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளானவர்கள் பஜனையில் பங்கேற்றனர்.