/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டி அடையாளத்தை இழக்கும் அமராவதி ஆற்றை காப்பாற்றுங்க!வீணாகும் நீரை சேமிக்க தடுப்பணைகள் அவசியம்
/
புதர் மண்டி அடையாளத்தை இழக்கும் அமராவதி ஆற்றை காப்பாற்றுங்க!வீணாகும் நீரை சேமிக்க தடுப்பணைகள் அவசியம்
புதர் மண்டி அடையாளத்தை இழக்கும் அமராவதி ஆற்றை காப்பாற்றுங்க!வீணாகும் நீரை சேமிக்க தடுப்பணைகள் அவசியம்
புதர் மண்டி அடையாளத்தை இழக்கும் அமராவதி ஆற்றை காப்பாற்றுங்க!வீணாகும் நீரை சேமிக்க தடுப்பணைகள் அவசியம்
ADDED : மே 19, 2024 11:11 PM

உடுமலை:உடுமலை அமராவதி ஆறு, புதர் மண்டி, ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. அவற்றை அகற்றி, தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அமராவதி ஆறு, அணையில் துவங்கி, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக, 148 கி.மீ., துாரம் பயணித்து, திருமுக்கூடலுாரில் காவிரியுடன் இணைகிறது.
பாசனம் மட்டுமின்றி, வழியோர கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறு, தற்போது பராமரிப்பின்றி, அவல நிலையில் காணப்படுகிறது.
வழியோர கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும், திட, திரவ கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. மேலும், நீர் வழித்தடங்களில், செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. அதோடு, ஆகாய தாமரை செடிகள் அதிகளவு நீர் செல்லும் பாதைகளை ஆக்கிரமித்துள்ளன.
இதனால், பொதுமக்கள் ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு, பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் போது, நீரோட்டத்தையும் பெருமளவு பாதிக்கிறது.
எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படும் புதர்கள், ஆகாய தாமரை செடிகளை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பணைகள் தேவை
பருவ மழை காலங்களில், அமராவதி அணை நிரம்பி, ஆண்டு தோறும் பல டி.எம்.சி., நீர் வெளியேற்றப்படுகிறது, கோடை காலங்களில் ஆறு வறண்டு, வழியோர கிராமங்களில் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் தாலுகாவில், பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திருப்பும் வகையில், 28 தடுப்பணைகள் உள்ளன. அவையும், முறையாக பராமரிக்காமல், சிதிலமடைந்து காணப்படுகின்றன.
எனவே, ஆற்றின் குறுக்கேயுள்ள பழமையான தடுப்பணைகளை புதுப்பிக்கவும், நீரை தேக்கி ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில், அவற்றின் உயரத்தை அதிகரிக்கவும் வேண்டும் திட்டமிட வேண்டும்.
அதே போல், மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில், தாராபுரம், புதுப்பை, தாளக்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்பணைகள் உள்ளன.
ஆண்டு தோறும் பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகும் நிலையில், ஆற்றில் தேவையான இடங்களில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

