/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவித்தொகை: 46 மாற்றுத்திறனாளிகள் தேர்வு
/
உதவித்தொகை: 46 மாற்றுத்திறனாளிகள் தேர்வு
ADDED : செப் 02, 2025 11:16 PM
திருப்பூர்; மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடந்த நேர்காணலில், மாற்றுத்திறனாளிகள் 46 பேர், உயர் பராமரிப்பு உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர்.
உடல் பாதிப்பு 80 சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சுயமாக செயல்பட முடியாத, முதுகு தண்டுவடம் பாதித்த, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை, பராமரிப்பாளர்கள் கவனித்து கொள்கின்றனர். இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களை கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளருக்காக மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உயர் ஆதரவு உதவித்தொகைக்காக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார்.
அரசு மருத்துவமனை எலும்புமுறிவு மருத்துவர் சுந்தரமூர்த்தி, மனநல மருத்துவர் ரமேஷ், குழந்தைகள் நல மருத்துவர் சஞ்சய் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, சான்று வழங்கினர். மொத்தம், 67 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றநிலையில், 46 பேர், உயர் பராமரிப்பு உதவித்தொகை பெற பயனாளியாக தேர்வு செய்யப்பட்டனர்.