நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.
மாணவர்கள் தேவாரம் பாடி விழாவை துவக்கி வைத்தனர். கோவை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி செயலாளர் கவிதாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சின்னராஜூ நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி ஆண்டு அறிக்கை வாசித்தார். நடப்பு கல்வியாண்டில் நுாறு சதவீதம் வருகை பதிவு செய்த மாணவர்களுக்கும், முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

