நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், குமரானந்தபுரத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது. வார்டு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் பத்மாவதி, தொடக்கவுரையாற்றினார்.
தலைமை ஆசிரியர்கள் வனிதா, சாந்தி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.
பள்ளிக்கு 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்கியவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.