/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
/
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 29, 2024 09:09 PM

உடுமலை: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி நடந்தது.
அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துவதற்கும், அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதற்கும், வானவில் மன்றம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தின் சார்பில், மாணவர்களின் சிறு கண்டுபிடிப்புகள், படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கப்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான வானவில் மன்ற அறிவியல் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில், முதற்கட்டமாக பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சி துவங்கியுள்ளது.
இதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கண்காட்சி நடந்தது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.
தலைமையாசிரியர் அப்துல்காதர் கண்காட்சியை துவக்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
காற்று அழுத்தத்தில் இயங்கும் பொக்லைன் கருவி, இயற்கை சூழல், அறிவியல் சாகசங்கள் உட்பட பல்வேறு படைப்புகளை, மாணவர்கள் காட்சிப்படுத்தினர். பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், வட்டார அளவிலான கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.