/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி பராமரிப்பு மானிய தொகையை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தணும்
/
பள்ளி பராமரிப்பு மானிய தொகையை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தணும்
பள்ளி பராமரிப்பு மானிய தொகையை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தணும்
பள்ளி பராமரிப்பு மானிய தொகையை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தணும்
ADDED : மார் 26, 2025 09:07 PM
உடுமலை; பள்ளி பராமரிப்பு மானியத்தொகையை, மாத இறுதிக்குள் பயன்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு துவக்கம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, சிறிய மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், பராமரிப்பு பணிகளுக்கும் கல்வியாண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் மானியத்தொகை வழங்கப்படுகிறது.
1 முதல் 30 எண்ணிக்கையிலான மாணவர் எண்ணிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், 31 முதல் 100 எண்ணிக்கைக்கு 25 ஆயிரமும், அதற்கும் மேல் மாணவர் எண்ணிக்கை உள்ள உயர்நிலை பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.
இத்தொகை, பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது. இத்தொகையை சுகாதாரப்பணிகளுக்கும், சிறிய மராமத்து பணிகள், பள்ளி கட்டடங்களுக்கு வண்ணம் பூசுதல், கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு, முதல் பாதி மானியத்தொகை மட்டுமே துவக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் தான், நடப்பு கல்வியாண்டுக்கான இரண்டாம் கட்ட மானியத்தொகை பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தொகையை, மார்ச் இறுதிக்குள் பயன்படுத்த வேண்டுமென கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு வங்கிக்கணக்கில் உள்ள மானியத்தொகையை, பள்ளிகளுக்கு, உடனடியாக அவற்றை பயன்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.