தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி திறப்பு; காய்கறி விற்பனை அமோகம்

பள்ளி திறப்பு; காய்கறி விற்பனை அமோகம்

பள்ளி திறப்பு; காய்கறி விற்பனை அமோகம்


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 91 டன் காய்கறிகள் விற்பனையாகின.

காலாண்டு தொடர் விடுமுறைக்குப் பிறகு கடந்த 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பத்து நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி விடுதிகள், கேன்டீன்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு தயாரித்துக் கொடுக்க வேண்டியுள்ளதால், இல்லத்தரசிகள் காலையிலேயே காய்கறி மற்றும் மளிகைக் கடைகளுக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, விடுமுறை காலத்தில் சற்று மந்தமாக இருந்த காய்கறி விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள், மளிகைக் கடைகளிலும் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளதால், உழவர் சந்தைகள் மற்றும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டிலும் முந்தைய வாரத்தைவிட நடப்பு வாரத்தில் விற்பனை உயர்ந்துள்ளது.

நேற்று வடக்கு உழவர் சந்தையில் 21 டன் காய்கறிகளும், தெற்கு உழவர் சந்தையில் 65 முதல் 70 டன் வரையிலும் காய்கறிகள் விற்பனையாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us