/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு
/
தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு
தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு
தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு
ADDED : அக் 24, 2025 06:18 AM

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் வருகை குறைவாக இருந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்து, 22ம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், கனமழை காரணமாக பள்ளிகள் நேற்றுமுன்தினம் விடுமுறை விடப்பட்டது. இதனால், தீபாவளி பண்டிகை விடுமுறை (18 முதல் 22ம் தேதி வரை) ஐந்து நாட்களானது. நேற்று (23ம் தேதி) ஐந்து நாட்களுக்கு பின் பள்ளிகள் திறந்தும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூட குறைந்தளவு மாணவர்களே வந்திருந்தனர்.
பொதுவாக வகுப்பறை ஒரு டேபிளுக்கு 4-5 மாணவர் வரை அமரும் நிலையில், மாணவர் வருகை குறைந்ததால், ஒரு டேபிளுக்கு, இரண்டு மாணவர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர் வருகைப்பதிவு தினசரி கேட்கப்படுவது வழக்கம். அந்நடைமுறை நேற்றைய தினமும் பின்பற்றப்பட்டது,' என்றனர்.