ADDED : நவ 07, 2025 08:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
முதலில் உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றவர்கள், நடைமேடை மற்றும் ரயில் இயக்கம் குறித்து பார்வையிட்டனர். பின்னர், ராகல்பாவி பிரிவிலுள்ள தனியார் நர்சரிக்கு சென்றவர்கள், பல வண்ண மயமான செடிகளையும் பூக்களையும் கண்டுகளித்தனர்.

