/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம்: பஸ் ஸ்டாண்டில் அச்சம்
/
காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம்: பஸ் ஸ்டாண்டில் அச்சம்
காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம்: பஸ் ஸ்டாண்டில் அச்சம்
காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம்: பஸ் ஸ்டாண்டில் அச்சம்
ADDED : நவ 07, 2025 08:57 PM

உடுமலை: காட்சிப் பொருளாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் நியமித்து, உடுமலை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு, சுழற்சி முறையில், போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த புறக்காவல் நியைலம் போலீசார் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. பஸ் ஸ்டாண்டின் பல இடங்களில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேற அமைத்துள்ள வழித்தடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
மூணாறு, திருப்பூர் உள்ளிட்ட வழித்தட பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில், பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இரவு நேரங்களில் அங்கு நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது.
புறக்காவல் நிலையம் முன், வரிசையாக, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். விபத்து ஏற்படும் வகையில், பஸ் ஸ்டாண்டுக்குள் வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர்.
இவ்வாறு, பல்வேறு பிரச்னைகள் பஸ் ஸ்டாண்டில் தொடர்கதையாக உள்ளது. பிரச்னைக்கு தீர்வாக புறக்காவல் நிலையத்துக்கு போலீசார் நியமித்து பஸ் ஸ்டாண்டுக்குள் ரோந்து செல்ல வேண்டும்.
இது குறித்து திருப்பூர் எஸ்.பி., கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

