/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வேன் பள்ளத்தில் சாய்ந்தது; மோசமான சாலையால் விபத்து
/
பள்ளி வேன் பள்ளத்தில் சாய்ந்தது; மோசமான சாலையால் விபத்து
பள்ளி வேன் பள்ளத்தில் சாய்ந்தது; மோசமான சாலையால் விபத்து
பள்ளி வேன் பள்ளத்தில் சாய்ந்தது; மோசமான சாலையால் விபத்து
ADDED : ஆக 06, 2025 12:30 AM

அவிநாசி; அவிநாசி அருகே குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில், நிலை தடு மாறிய தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் சாய்ந்தது.
அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள எம்.எஸ்., வித்யாலயா பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலை மாணவர்களை அழைத்து வர, ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவிலிலிருந்து அபிராமி கார்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, ரோட்டின் ஓரமாக இருந்த மூன்று அடி பள்ளத்தில் வேன் நிலை தடுமாறி சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த மாணவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
இது குறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி, முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் கூறியதாவது:
சின்னேரிபாளையம் ஏ.டி. காலனி முதல் காட்டு மாரியம்மன் கோவில் வரை, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்தும் 1.5 கிலோ மீட்டர் தார் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இது குறித்து, பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் சீரமைக்கவில்லை. ரோட்டின் இருபுறமும், மூன்றடி ஆழத்துக்கு குழி உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது அசம்பாவிதமாக, குழிக்குள் கவிழ்ந்து விபத்துகள் நடக்கிறது.
இன்றும் பள்ளி வேன் கவிழ்ந்ததற்கு மோசமான ரோடு தான் காரணம். உடனடியாக சரி செய்து தராவிட்டால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.