/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலாண்டு தேர்வு: இன்று பள்ளி செயல்படும்
/
காலாண்டு தேர்வு: இன்று பள்ளி செயல்படும்
ADDED : செப் 20, 2024 10:52 PM
திருப்பூர் : நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி கல்வித்துறை நாட்காட்டியின் படி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. தேர்வுகள் வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. 28ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை ஐந்து நாள் விடுமுறை. அக்., 3ம் தேதி முதல் இரண்டாம் பருவம், அரையாண்டுக்கான பாட வகுப்புகள் துவங்குகிறது.
தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருவதாலும், கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்பட்ட மற்றும் சமீபத்தில் 'அப்டேட்' செய்து வழங்கப்பட்ட நாட்காட்டி குறிப்பின் படி இன்று (21ம் தேதி) பள்ளிகள் செயல்படும்.
செப்., மாதத்துக்குரிய, 20 வேலை நாட்களில், 21ம் தேதி இடம் பெற்றுள்ளதால், இன்று அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். பள்ளி தலைமை ஆசிரியர் வருகைப்பதிவை உறுதி செய்து, வழக்கம் போல் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.