/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமையப்போட்டி; தயாராகின்றன பள்ளிகள்
/
குறுமையப்போட்டி; தயாராகின்றன பள்ளிகள்
ADDED : ஜூன் 27, 2025 11:51 PM

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் குறுமையம் மற்றும் மாவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் சின்னையா முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் வரவேற்றார்.மாவட்டம் முழுதும், எட்டு தாலுகாவில் இருந்து விளையாட்டு இயக்குனர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து பேசுகையில், ''ஒரு பள்ளிக்கு குறுமைய போட்டி நடத்த வழங்கப்படுவது வாய்ப்பு மட்டுமல்ல. அவர்களது ஆளுமை, திறனை காண்பிப்பதற்கான வாய்ப்பு. போட்டி களில் வெற்றி பெற திறம்பட அனைவரும் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும்.
கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டில் சிறந்தவர்களாக திருப்பூர் வீரர், வீராங்கனைகள் திகழும் வகையில் பணியாற்றிட வேண்டும்,' என்றார்.
நடுநிலைப்பள்ளிக்கு முதல்முறை வாய்ப்பு
கூட்ட நிறைவில், ஒவ்வொரு குறுமையத்திலும், போட்டிகளை முன்னின்று நடத்தும் பொறுப்பு பள்ளிகள் விபரத்தை சி.இ.ஓ., அறிவித்தார்.
அதன்படி, திருப்பூர் தெற்கு - அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.பெரியபாளையம்; திருப்பூர் வடக்கு - அரசு உயர்நிலைப்பள்ளி, வாவிபாளையம்; அவிநாசி - அரசு மேல்நிலைப்பள்ளி, கானுார்புதுார்; பல்லடம் - ராஜா, நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்; தாராபுரம் - அரசு மேல்நிலைப்பள்ளி, கொளத்துப்பாளையம்; காங்கயம்- கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் பள்ளி ஆகியன நடத்துகின்றன.
இதுவரை குறுமைய போட்டிகளை நடத்தும் பொறுப்பு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், முதன்முறையாக, உடுமலை குறுமைய போட்டிகளை நடத்தும் பொறுப்பு, சோமவாரப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்பள்ளி தலைமை ஆசி ரியர், விளையாட்டு ஆசிரியர் ஆர்வமுடன் விண்ணப்பித்ததால், இவ்வாய்ப்பு வழங்கப்பட்டதாக, விளையாட்டு பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.