ADDED : ஜன 24, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறு (ஜன., 11 - 12) பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கடந்த, 13ம் தேதி போகி பண்டிகை நாளில், பள்ளிகள் செயல்பட்டது. 14 முதல், 17 வரை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறை; இந்நிலையில், சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, ஜன., 17 ம் தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டது.
இதனால், பொங்கலுக்கான விடுமுறை, ஆறு நாட்களாகியது. பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த, 20 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பொது விடுமுறைக்கு மாற்றாக, ஜன., 25ம் தேதி பள்ளிகள் செயல்படுமென ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, நாளை (25 ம் தேதி) பள்ளி வேலை நாள், என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

