/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜூலை 15, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களின் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கு கண்காட்சி நடத்தப்படுகிறது.
அவ்வகையில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டாடா பவர் நிறுவனம் மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இப்பள்ளியில், 760 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த இக்கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சுமதி, சரவணன், செல்வராணி நடுவர்களாக இருந்து, சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.
உதவி தலைமையாசிரியர் தமிழ்செல்வி நன்றி தெரிவித்தார்.