/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்
/
அறிவியல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 11, 2025 09:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.மாணவ, மாணவியர் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அறிவியல் செயல்முறைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பார்வையாளர்களுக்கு, அதற்குரிய விளக்கத்தையும் அளித்தனர். மாணவர்களின் அறிவியல் படைப்புகள், பெற்றோர், பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி தாளாளர் சரண்யா, முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர், மாணவர்களையும், ஊக்குவித்த ஆசிரியர்களையும் வெகுவாக பாராட்டினர்.