/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி: மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அச்சாரம்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி: மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அச்சாரம்
பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி: மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அச்சாரம்
பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி: மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அச்சாரம்
ADDED : ஜன 08, 2024 12:00 AM
உடுமலை;பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அறிவியல் பயிற்சி, மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அச்சாரமாக அமையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பணியாற்றும் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட அளவில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இப்பயிற்சி நடந்து வருகிறது.'நுண்ணுயிரியல் ஒரு மேற்பார்வை' என்ற தலைப்பில் நடந்த பயிற்சியில், நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காந்திமதி, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர்களின் கண்டுபிடிப்பு, அவற்றை ஆய்வகங்களில் வளர்ப்பதற்கான வழிமுறைகள், மரபுவழி மாற்றம் செய்யப்பட்ட, உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர் லிட்டிகொரியா, உதவி பேராசிரியர் சுதா ஆகியோர் பேசினர்.
விலங்கியல் அருங்காட்சியகத்தில், உயிரினங்களின் ஒருங்கமைவு தொடர்பான செயற்முறை பயிற்சி வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சுமதி, மூர்த்திக்குமார், ஷீபா ஆகியோர் பேசினர்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாலசரவணன் கூறுகையில், ''இதுபோன்ற பயிற்சிகளை பெறும் ஆசிரியர்களால், மாணவர்களின் அறிவியல் கற்றல் திறன் மேம்படுவது மட்டுமின்றி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள அச்சாரமாக இருக்கும்'' என்றார்.