/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொளுத்தும் வெயில்; சுகாதாரத்துறை அறிவுரை
/
கொளுத்தும் வெயில்; சுகாதாரத்துறை அறிவுரை
ADDED : மார் 18, 2024 03:08 AM
திருப்பூர்: 'கோடை வெயில் காலங்களில் பரவும் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கம் கடுமையாகும் போது, உடலின் வெப்ப நிலையும் மாறும். சாதாரண நிலையில் இருந்து வெப்ப நிலை உயரும் போது, காய்ச்சல் தொற்றாக மாற வாய்ப்புள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் சளி, காய்ச்சல் இருந்தால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ_மனைக்கு சென்று சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும். அதிக வியர்வை, சோர்வு, நடுக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
அம்மை ஒரு வகை வைரசால் பரவும் நோய். இது வெயில் காலங்களில் எளிதில் பரவும். இந்த நோய் பொதுவாக சிறுவர், சிறுமியரை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர், தும்மல் மற்றும் இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த நோய் பிறருக்கும் பரவும்; பயப்பட வேண்டியதில்லை. பத்து நாட்கள் அல்லது இரு வாரங்களில் சரியாகிவிடும். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.

