/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேடல்' வழிகாட்டும் நிகழ்ச்சி அவிநாசியில் இன்று துவக்கம்
/
'தேடல்' வழிகாட்டும் நிகழ்ச்சி அவிநாசியில் இன்று துவக்கம்
'தேடல்' வழிகாட்டும் நிகழ்ச்சி அவிநாசியில் இன்று துவக்கம்
'தேடல்' வழிகாட்டும் நிகழ்ச்சி அவிநாசியில் இன்று துவக்கம்
ADDED : ஜன 10, 2026 05:02 AM
அவிநாசி: ரோட்டரி திருப்பூர் மாவட்டம், 3203, ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் மற்றும் ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் இணைந்து, 'தேடல்' என்ற பெயரில், மெகா வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அவிநாசி கச்சேரி வீதியில் உள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில், இன்றும்(10ம் தேதி), நாளையும் (11ம் தேதி) இரு நாட்களுக்கு நடக்கிறது. இதில், 12ம் வகுப்புக்கு பின் எதுமாதிரியான படிப்பை தேர்வு செய்வதன் வாயிலாக, பிரகாசமான எதிர்காலம் அமையும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. கல்வி, தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து அரிய பல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் வகையில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, நடிகர் சதீஷ், பேச்சாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் பங்கேற்று, பேசுகின்றனர். மாணவர்கள், பெற்றோர், ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, அனைவரும் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

