/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேடல் சிறப்பு; உயர்ந்தது பொறுப்பு! கல்லுாரிப் படிப்பு முடிந்த கையோடு ஆடை வடிவமைப்பாளராக பரிணாமம்
/
தேடல் சிறப்பு; உயர்ந்தது பொறுப்பு! கல்லுாரிப் படிப்பு முடிந்த கையோடு ஆடை வடிவமைப்பாளராக பரிணாமம்
தேடல் சிறப்பு; உயர்ந்தது பொறுப்பு! கல்லுாரிப் படிப்பு முடிந்த கையோடு ஆடை வடிவமைப்பாளராக பரிணாமம்
தேடல் சிறப்பு; உயர்ந்தது பொறுப்பு! கல்லுாரிப் படிப்பு முடிந்த கையோடு ஆடை வடிவமைப்பாளராக பரிணாமம்
ADDED : அக் 14, 2024 11:48 PM

திருப்பூர் வஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர், மோனிஷா. குமரன் கல்லுாரியில், பேஷன் டிசைனிங் படிப்பை, இந்தாண்டு முடித்த கையோடு, தொழில் முனைவராக மாறியுள்ளார். ஆடை வடிவமைப்புகள் இவருக்குக் கைவந்த கலை; ஆடை வாடிக்கையாளர்கள் 25க்கும் மேற்பட்டோருக்கு டிசைனராக உள்ளார்.
மோனிஷா, நம்மிடம்
பகிர்ந்தவை :
பள்ளிப் படிப்பில் ஆடை அணிவதில் துவங்கிய ஆர்வம், பேஷன் டிசைனிங் வரை தொடர்ந்தது. நம் உயர் படிப்பு, வேலைவாய்ப்பு ஆடை வடிவமைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை பள்ளி முடிக்கும் போதே திட்டமிட்டு, பி.எஸ்.சி., சி.டி.எப்., கோர்ஸில் இணைந்தேன். கல்லுாரி மூன்றாம் ஆண்டு முடிக்கும் முன்பே ஆன்லைனில் பல டிசைன்களை அறிந்து, நிறைய காஸ்டியூம் டிசைன் செய்து, காட்சிப்படுத்த துவங்கினேன். தையல், பேட்டனிங், எம்ப்ராய்ட்ரி முழுமையாக கற்றுக்கொண்டு,'காஸ்டியூம் டிசைன்' அறிந்தேன்.ஆடை வடிவமைப்பில் சாதிக்க வேண்டுமெனில், கற்பனை, சிந்தனைத்திறனை தாண்டிய அனுபவம், தேடல் அதிகமாக வேண்டும். ஒரு டிசைனை பார்த்தால், அதை எப்படி உருவாகியிருக்கிறது என்பதை அறிய முனைந்தேன். ஒவ்வொரு நாளும் திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தேன்.
இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைக்கு சேர்ந்த பின், ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் பேசும் போதும் அவர்களது எதிர்பார்ப்பு என்ன, எப்படிப்பட்ட ஆடை டிசைன் ரகங்களை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வேன். அதற்கேற்ப ஆர்டர்களை அன்றே தயாரிக்க முயற்சிப்பேன். அதன் மூலம் தான் எனக்கான வாய்ப்புகள் தேடி வந்தன.தற்போது, திருப்பூர் மற்றும் சென்னையில், 25க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு டிசைனராக உள்ளேன். அவர்கள் எதிர்பார்க்கும் ஆர்டர்களை செய்து தருகிறேன்.
திருப்பூரில் உள்ள ஒரு ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில், பயிற்சியாளராகவும் உள்ளேன். கற்றுக்கொண்டதை, பிறருக்குக் கற்றுக்கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, அளவு கடந்தது.தங்கள் துறைகளில் சாதிக்க நினைப்பவர்கள் தினமும் புதிய நாளாக எண்ணி, தங்களை தாங்களே 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் இன்றைய போட்டி உலகில் வாழ முடியும்; வெல்லவும் முடியும்.
இவ்வாறு, மோனிஷா கூறினார்.

