/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
/
இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
ADDED : டிச 16, 2025 07:18 AM

உடுமலை: இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக குமரலிங்கம் பகுதியில், விளைநிலங்களை தயார்படுத்தும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அடிப்படையாகக்கொண்டு, இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு, விளைநிலங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக நாற்றங்கால் அமைத்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'குமரலிங்கம் பகுதியில், அமராவதி பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் அனைத்தும் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், நீர் நிர்வாகத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது. பருவமழைக்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, நெற்பயிர்கள் பாதிக்கின்றன. எனவே, கால்வாய்களை முறையாக துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

