sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சம வேலை - சம ஊதியம்' கேட்கும் இடைநிலை ஆசிரியர்கள்

/

'சம வேலை - சம ஊதியம்' கேட்கும் இடைநிலை ஆசிரியர்கள்

'சம வேலை - சம ஊதியம்' கேட்கும் இடைநிலை ஆசிரியர்கள்

'சம வேலை - சம ஊதியம்' கேட்கும் இடைநிலை ஆசிரியர்கள்


ADDED : ஜன 28, 2026 08:18 AM

Google News

ADDED : ஜன 28, 2026 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : இடை நிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை இடம் மாறுதல் செய்து, நேற்று முதல், கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தி வருகின்றனர்.

'சமவேலைக்கு சம ஊதியம்,' கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், கே.எஸ்.சி. பள்ளி வீதியில், மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்திருந்த, பழைய நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முதல், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு மாறுதல் செய்துள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க திருப்பூர் மாவட்ட தலைவர் பத்மராஜ் மாணிக்க முத்து, செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் கார்த்திக் உள்பட இடை நிலை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலக வளாகம் முன், நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாவட்ட தலைவர் பத்மராஜ் மாணிக்க முத்து கூறியதாவது:

கடந்த 2009, ஜூன் 1 ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை சம்பளம் குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடு களையப்படும் என, அப்போதைய முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார். முந்தைய தேர்தலிலும், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், இந்த வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில், 515 இடை நிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us