/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இரவு காவலர்கள் நியமிக்கணும்
/
அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இரவு காவலர்கள் நியமிக்கணும்
அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இரவு காவலர்கள் நியமிக்கணும்
அரசு பள்ளிகளில் பாதுகாப்பு இரவு காவலர்கள் நியமிக்கணும்
ADDED : ஆக 28, 2025 11:02 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த, இரவுக்காவலர்கள் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை, பெரும்பாலான கிராமப்பகுதி பள்ளிகளில் பள்ளி பாதுகாப்புக்கென காவலர்கள் இல்லை.
பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர்களின் முயற்சியால் சில பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளிகளில் முன்பு இருந்த இரவுக்காவலர் பணியிடங்கள் தற்போது இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் வாயிலாக, அரசுப்பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கேட்கப்பட்டது. ஆனால், இதுவரை அவ்வாறு எந்த பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை.
கிராமப்பகுதிகளில் வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைந்து சேதப்படுத்துவது, அசுத்தப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
பள்ளிகளின் சார்பில் புகார் அளித்து, போலீஸ் ரோந்து நடத்தினாலும், சில நாட்களுக்கு பின் மீண்டும் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்கிறது.
இந்த பிரச்னைகளால், அப்பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. அரசுப்பள்ளிகளில், தற்காலிக பணி நியமன அடிப்படையில் இரவுக்காவலர்கள் நியமிப்பதற்கு கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.