/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதை, உரங்கள் இருப்பு வேளாண் துறை தகவல்
/
விதை, உரங்கள் இருப்பு வேளாண் துறை தகவல்
ADDED : ஏப் 28, 2025 11:03 PM
உடுமலை,; பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு திருப்தியாக உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்களின் விதைகள் மற்றும் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.
நெல் ரக விதைகள், 13.12 டன்; தானிய பயிறுகள், 21.34 டன்; பயறு வகை பயிறுகள், 24.06 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 20.55 டன் இருப்பு உள்ளது. மேலும், நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.
மாவட்டத்திலுள்ள, கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கடைகளில், யூரியா, 2,507 டன், டி.ஏ.பி., 563 டன், காம்ப்ளக்ஸ் உரம், 5,098 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 618 டன் இருப்பு உள்ளது, என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.