ADDED : அக் 06, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;தற்போது, புரட்டாசி பட்டம் துவங்கியுள்ள நிலையில் வெப்ப சலன மழை பெய்ய துவங்கியுள்ளது. விதைப்புக்குத் தேவையான விதை, தானியங்கள் பொங்கலுார் வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உயர்தர மக்காச்சோளம், தட்டைப்பயிறு, உளுந்து, சோளம் ஆகியன வினியோகிக்கப்படுகிறது. சிட்டா, ஆதார் நகல் கொடுத்து விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று வேளாண் துறையினர் தெரிவித்தனர்.