ADDED : ஏப் 09, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு மாதாந்திர பணிமனை கூட்டம் நடந்தது.
ஊரக வேளாண் அனுபவ பயிற்சித்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் தங்கியுள்ள ஈரோடு துாக்கநாயக்கன்பாளையம் முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் பல்கலையால் வெளியிடப்பட்ட விதை அமிர்தம், தென்னை டானிக், உயிர் உரங்களை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷீலாபூசலட்சுமி, வேளாண் துணை இயக்குனர் பாமாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

