/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழை சீசனுக்கு விதைகள் இருப்பு
/
பருவமழை சீசனுக்கு விதைகள் இருப்பு
ADDED : ஆக 22, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நடப்பு சீசன் விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை சீசனில் விதைப்பு செய்வதற்காக, உடுமலை வட்டார விரிவாக்கம் மையத்தில், கொண்டக்கடலை, உளுந்து, வெள்ளைச்சோளம், கம்பு, வீரிய ஒட்டு மக்காச்சோளம்
ஆகிய பயிர்களுக்கான தரமான விதைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.