/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையை ஆக்கிரமித்த பறிமுதல் வாகனங்கள்
/
சாலையை ஆக்கிரமித்த பறிமுதல் வாகனங்கள்
ADDED : பிப் 18, 2025 11:54 PM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வெளியே வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், ரோட்டை ஆக்கிரமித்து வருகின்றது.
திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும், வாகன தணிக்கையின் போது, கேட்பாரற்று நீண்ட நாட்களாக நிறுத்தி செல்லப்படும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள். நீண்ட நாளாக உரிமை கோரப்படாத வாகனங்கள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம்.
இச்சூழலில், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வெளியே பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஸ்டேஷன் சுற்றியும் நிறுத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நிறுத்தப்படும் வாகனம் திருடு போக வாய்ப்புள்ளது.
மழை, வெயில் போன்றவற்றில் நிறுத்தப்படுவதால், வாகனமும் முழுமையாக சேதமடைந்து விடும். ஸ்டேஷன் வெளியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, பாதுகாப்பான வேறு இடத்தில் நிறுத்தி, ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.