sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம் இடம் தேர்வு செய்து அரசுக்கு கருத்துரு

/

ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம் இடம் தேர்வு செய்து அரசுக்கு கருத்துரு

ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம் இடம் தேர்வு செய்து அரசுக்கு கருத்துரு

ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம் இடம் தேர்வு செய்து அரசுக்கு கருத்துரு


ADDED : ஜூன் 06, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூரில், ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, கோவில் வழி பஸ்ஸ்டாண்ட் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூர் வணிக வரி கோட்டம், கடந்த 2023, ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. மூன்று மண்டலங்கள், 21 சரகங்களுடன், வணிக வரி கோட்டம் செயல்பட்டு வருகிறது. மொத்தம், 75 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.

வணிக வரி கோட்டத்தின் தலைமையகம், இணை கமிஷனர் (நிர்வாகம்), இணை கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) அலுவலகங்களும், திருப்பூர் - 3 வது மண்டல அலுவலகங்களுடன் அவிநாசி - திருப்பூர் ரோட்டிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடத்தில் இயங்குகிறது.

திருப்பூர் வணிக வரி மண்டலம் - 2 மற்றும் ஆறு சரக அலுவலகங்கள், குமார் நகரில் தனியார் கட்டடத்தில் இயங்குகிறது. திருப்பூர் மண்டலம் - 1 மற்றும் எட்டு சரக அலுவலகங்கள் மட்டும், குமரன் ரோட்டில், சொந்த கட்டத்தில் இயங்கிவருகிறது.

சட்டசபை மானிய கோரிக்கையில், திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், தாராபுரம் ரோட்டில், கோவில் வழி பஸ்ஸ்டாண்ட் அருகே, ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் அமைக்க, 3.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்நிலத்தை, வணிக வரித்துறைக்கு மாறுதல் செய்வதற்கான ஒப்புதல் கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி கிடைத்த உடன், கட்டுமான பணிகளை துவக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். வணிக வரி கோட்டத்தின், நிர்வாகம் மற்றும் நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் அலுவலகங்கள், துணை கமிஷனர்கள் கட்டுப்பாட்டிலுள்ள மூன்று மண்டல அலுவலகங்கள் மற்றும் சரக அலுவலகங்களை, புதிதாக அமையும் ஒருங்கிணைந்த வணிக வரி வளாகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பூர் வணிக வரி மண்டலம் -3க்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் சரகங்களுக்கு, சிவன்மலையிலும், பல்லடம் - 1, 2 சரகங்களுக்கு, பல்லடத்திலும்; உடுமலை வடக்கு மற்றும் தெற்கு சரகங்களுக்கு, உடுமலை - பழனி ரோட்டிலும், சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதன் வாயிலாக மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வாடகை செலவு தவிர்க்கப்படும். இதுதவிர, வர்த்தகர்கள், ஒரே இடத்தில் வணிக வரித்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும், மிக எளிதாக பெறமுடியும்.






      Dinamalar
      Follow us