/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுய உதவி குழு கடனுக்கு கமிஷன் கேட்டு மிரட்டல்
/
சுய உதவி குழு கடனுக்கு கமிஷன் கேட்டு மிரட்டல்
ADDED : மே 03, 2025 04:40 AM
திருப்பூர்; மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் பெற்ற வங்கி கடனுக்கு கமிஷன் கேட்டு மிரட்டியதாக ஊர்க்காவல் படையில் பணியாற்றும் தம்பதி மீது திருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் - வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனைச் சேர்ந்த மாரீஸ்வரி, வேலம்பாளையம் போலீசில் அளித்த புகார்:
எனக்கு அறிமுகமான ஒரு பெண், மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தியன் வங்கி பசூர் கிளையில், அவருக்கு கடன் கிடைத்தது. தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், இந்த கடன் தொகைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
வங்கி மேலாளர் எனக்கு அறிமுகம் என்பதால், அப்பெண்ணுக்கு கடன் வழங்கலாம் என்று நான் தெரிவித்தேன். வங்கி யும் கடன் தொகையை அவருக்கு வழங்கியது.
இந்நிலையில், திருப்பூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் கலைவாணி, அவர் கணவர் ராம்குமார் மற்றும் இரு ெபண்கள் என் வீட்டுக்கு வந்து, கடன் பெற்றுத் தந்து நான் கமிஷன் வாங்கியதாகவும், அது தங்களுக்கு வர வேண்டும் என்றும் என்னை மிரட்டினர். மேலும், ராம்குமார் தன்னை போலீஸ் என்று கூறி, என்னை வீடியோ பதிவும் செய்தார்.
இவர்கள் இருவரும் இது போல் மகளிர் குழுவினருக்கு கடன் பெற்றுத் தந்து, மிரட்டல் விடுத்து, பெருமளவு கமிஷன் பெறுவதாகத் தெரிகிறது. அவர்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

