/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை கடைகளில் அநியாய விலைக்கு விற்பனை
/
சிவன்மலை கடைகளில் அநியாய விலைக்கு விற்பனை
ADDED : ஜன 20, 2025 11:38 PM

பொங்கலுார்; சிவன்மலையில் உள்ள முருகன் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை சுற்றிலும் ஏராளமான பாலிதீன் கவர்கள், காலி தண்ணீர் பாட்டில்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது.
இதனை அகற்றுவதற்கும், பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதை தடுக்கவும் எந்த நடவடிக்கையையும் அறநிலையத் துறை எடுப்பதில்லை.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சேவல், பசுமாடு, கன்று உள்ளிட்டவற்றை தானமாக கொடுக்கின்றனர். சேவல்கள் கோவில் வளாகத்தில் கட்டுப்பாடற்ற வகையில் சுற்றித் திரிகிறது. அவற்றின் எச்சம் பல இடங்களில் பரவி கிடக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில், 100 சதவீதம் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'பாக்குமட்டை தட்டு வெளியில் ஐந்து ரூபாய். ஆனால், சிவன்மலையில், 10 ரூபாய். தேங்காய், பழம் உள்ளிட்ட,50 ரூபாய் மதிப்பு உள்ள பூஜை பொருட்கள்,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் அநியாய விலைக்கு பொருட்களை விற்கின்றனர். குறைந்த வாடகைக்கு கடைகளை விட்டு நியாயமான விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

