/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா பதுக்கி விற்பனை; வடமாநில வாலிபர் கைது
/
கஞ்சா பதுக்கி விற்பனை; வடமாநில வாலிபர் கைது
ADDED : மார் 20, 2024 12:30 AM
அவிநாசி;அவிநாசி அருகே குன்னத்துாரில் கஞ்சா பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குன்னத்துாரில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, எஸ்.ஐ., அசோக்குமார், சச்சு ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அதில், ஈரோடு மாவட்டம், கொளப்பலுார், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பிரவாத் பாக் 30, என்பவர் தனது பெட்டிக்கடையில், 2 கிலோ கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் பிரவாத் பாக்கை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.

