/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 23ல் கருத்தரங்கு

ADDED : பிப் 21, 2025 12:08 AM
திருப்பூர்; திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பீஹார், உ.பி., ஒடிசா உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். விசைத்தறி, கட்டுமானம், எண்ணெய் ஆலை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு தங்கியுள்ளனர்.
வெளி மாநிலம் மற்றும் வேற்று மொழி பேசுவோர் என்ற காரணத்தால், உள்ளூர் மக்களுடனும், பிற மொழி பேசுவோருடனும் பழக வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கும், தேவையில்லாத பிரச்னைகளுக்கும் இவர்கள் ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இந்திய கம்யூ., தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் திருப்பூரில் வரும் 23ம் தேதி, புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய செயலாளர் சாத்தி வஹிதா நிஜாம், தேசிய துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.சட்டரீதியான சம்பளம், தொழிலாளர் நலன் மற்றும் பணியாற்றும் இடத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்து அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.