/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூத்தோர் தடகள போட்டி: வலிமை காட்டிய வீரர்கள்
/
மூத்தோர் தடகள போட்டி: வலிமை காட்டிய வீரர்கள்
ADDED : அக் 06, 2025 04:46 AM
திருப்பூர்: திருப்பூரில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில், ஏராளமான-வர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவி-லான மூத்தோர் தடகள போட்டி, தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயாவில் நேற்று நடந்தது. இருபாலருக்கான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது.ஓட்டத்தில், 100 மீட்டர், 200, 400, 800, 1,500 மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதுதவிர, 5 கி.மீ., வேக நடைபோட்டி, தடை தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்-டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில், ஆண்கள், பெண்கள் என, ஏராளானோர் பங்கேற்று, விளையாட்டுக்கு வயது ஒரு தடை கிடையாது, தன்-னம்பிக்கை இருந்தால், அனைத்தில் சாதிக்கலாம் என்ற வகையில் பங்கேற்று சிறப்பாக போட்டிகளில் விளையாடினர்.