ADDED : டிச 16, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வெட்டரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், முதலாம் ஆண்டு மூத்தோர் தடகளப்போட்டிகள், வரும் 29ம் தேதி, சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
ஓட்டப்போட்டி, நடைப்போட்டி, குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலிக்குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறுகின்றன. முப்பது வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். நுழைவுக்கட்டணம் 200 ரூபாய். ஒருவர் ஏதேனும் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். இத்தகவலை சங்கத் தலைவர் நாகராஜ், செயலாளர் சுமதி விஜயலட்சுமி உள்ளிட்டோர் தெரிவித்தனர். தகவல் அறிய: 98943 04454.