/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனுக்கு தனித்துறை ; சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
/
ரேஷனுக்கு தனித்துறை ; சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2025 10:40 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் ஊழியர் சங்க மாநில தலைவர் கவுதமன், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தேர்தல் வாக்குறுதி, 236ம் எண்ணில் அறிவித்தபடி, பொது வினியோக திட்டத்தை, தமிழக அரசு, தனித்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை முழுமையாக ஒதுக்கீடு செய்து, ஒரே நேரத்தில் கிடைக்கச் செய்யவேண்டும். புதிய தராசுகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின் றன. ரேஷன் அரிசியை, பைகளில் அடைத்து வழங்கவேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.