UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:16 PM
திருப்பூர்: காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 40, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 25 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - திருப்பூர் இடையே 3 நாட்களும் சேர்த்து 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பழநி, திருவண்ணாமலை, திருச்செந்துார் வழித்தடங்களில் பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
வரும் 5-ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வெளியூர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்ப வசதியாக மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
