/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் உற்பத்தி நிறுத்தம்: 'பவர்டேபிள்' சங்கம் அறிவிப்பு
/
தொடர் உற்பத்தி நிறுத்தம்: 'பவர்டேபிள்' சங்கம் அறிவிப்பு
தொடர் உற்பத்தி நிறுத்தம்: 'பவர்டேபிள்' சங்கம் அறிவிப்பு
தொடர் உற்பத்தி நிறுத்தம்: 'பவர்டேபிள்' சங்கம் அறிவிப்பு
ADDED : நவ 12, 2025 11:48 PM

திருப்பூர்: ஒப்பந்த கூலி உயர்வு கிடைக்கும் வரை, உற்பத்தி நிறுத்தம் நடக்குமென, பவர்டேபிள் உரிமையார்கள் அறிவித்துள்ளனர்.
கூலி உயர்வு ஒப்பந்தப்படி, கடந்த, 2025 ஜூன் 6ம் தேதி முதல், நடைமுறை கூலியில் இருந்து, பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, 7 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். சில நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் கூலி உயர்வு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புதிய துணி எடுப்பதில்லை என்று போராட்டம் நடந்து வந்தது. கைவசம் இருந்த துணியில் உற்பத்தி நடந்து வந்தது. இந்நிலையில், இன்று முதல், உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாகவும், சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பவர்டேபிள் நிறுவனங்கள் சங்க தலைவர் நந்தகோபால், செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறுகையில், 'சங்கத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஜூன் 6ம் தேதி முதல், 7 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
அதுவரை, வரும், 13ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் செய்வதென முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு, சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,' என்றனர்.

